Thursday, June 17, 2010

டென்மார்க்கில் இலங்கை ஊடகவியலாளர்கள்


டென்மார்க் வெளிநாட்டு அமைச்சின் அனுசரணையுடன், டனிடா அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில், இலங்கையைச் சேர்ந்த 21 ஊடகவியலாளர்கள் ஊடகப் பயிற்சிப் பயணமொன்றை மேற்கொண்டு
டென்மார்க் சென்றுள்ளனர்.

ஜுன் மாதம் 14ம் திகதி டென்மார்க் கொப்பன்ஹேகன் நகரில் ஆரம்பமான இந்தப் ஊடகப் பயிற்சி, எதிர்வரும் ஜுலை 2ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சிப் பயணத்தின் ஒரு கட்டமாக ஜுன் 21ம் திகதி பிரஸல்ஸ் செல்லும் இந்த ஊடகக் குழு, தொடர்ந்து 23ம் திகதி நோர்வே நாட்டுக்கும் செல்லவுள்ளது.

பிரஸல்ஸ்சில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் செல்லும் இந்த ஊடகவியலாளர் குழுவினர், ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பான சில கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளனர்.

தொடர்ந்து 23ம் திகதி நோர்வே செல்லும் அவர்கள் அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து பல்வேறு இராஜதந்திர தரப்புக்களையும் சந்திப்பதுடன், பிரதான நோர்வே ஊடகங்கள் சிலவற்றுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

டென்மார்க் திரும்பு முன் நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹேய்முடன் விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் இந்த ஊடகக் குழுவினர் ஈடுபடுவர்.

நோர்வே பயணம் முடித்து டென்மார்க் திரும்பும் ஊடகக் குழுவினர் அங்கு தொடர்ந்து ஒரு வாரம் மேலதிக ஊடகப் பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்களில் கலந்துகொண்ட பின்னர், ஜுலை 5ம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.

1 comment:

  1. ஆஹா..... இது நல்ல சமாச்சாரம் ஆச்சே..... இளம் ஊடகவியளாளர்கள் சார்பில் வாழத்துக்கள்....
    மயூரகிரி

    ReplyDelete